குறும்படப் போட்டி

IBC தமிழ் வழங்கும் Short Film Express ஈழத்தமிழ் குறும்படப் போட்டி 2016

“எமது நட்சத்திரங்களை நாமே உருவாக்குவோம்” எனும் தார்மீகக் கோட்பாட்டோடு எமது கனவை, எமது வலிகளை, எமது மகிழ்வுகளை, எமது மொழியில் நாமே சொல்வதற்கான ஒளி ஊடகமாய் IBC தமிழ் அகலக்கால் பதித்துள்ளது.

காலம் எமக்களித்த சரியான களத்தை எமது கலைஞர்களுக்காக நாம் கட்டமைத்தபடி எமது கலைவடிவம், பண்பாடு, விழுமியம் வரலாறு என்பவற்றை மிகச்சரியாக நிறுவியபடி துறைசார் கலைஞர்களிடமிருந்து அதி சிறப்பு படைப்புகளை பெற்றவண்ணம் அவற்றை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் பாரிய பொறுப்பை எம் தோள் தடங்களில் தாங்கியபடி நடக்கிறோம்.

“எமது படைப்புக்களை நாமே பலமாக்குவோம்” எனும் உறுதியோடு பயணிக்கும் எம்மோடு ஈழத்தமிழ் படைப்பாளிகளாகிய நீங்களும் நம்பிக்கை கரம்பிடித்து நடப்போம் வாருங்கள்…

நீங்கள் ஒரு குறும்பட இயக்குனரா?

வித்தியாசமான எண்ணக்கரு ஒன்றைக் கச்சிதமான கமெரா கோணங்களின் வழி காட்சிகளாக்கிக் கதை சொல்லும் கலை அறிந்தவரா நீங்கள்?

காகிதத் தாள்களில் இருக்கும் உங்கள் காவியங்களை ஒளித்திரை ஓவியங்களாக உருமாற்றுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது உங்கள் IBC தமிழ்.

ஈழத்தமிழ் குறும்படப் போட்டி 2016 எனும் பெரு விழா ஒன்றை நடாத்தி அதில் வெற்றிபெறும் இயக்குனருக்கு ஒரு முழுநீள திரைப்படத்தை இயக்கும் ஒரு அரிய வாய்ப்பை வழங்குகிறது.

© All Rights Reserved @ IBCTamil.com